Published : 29 Aug 2019 08:17 AM
Last Updated : 29 Aug 2019 08:17 AM

தமிழகத்தில் 12 ஆண்டுகளாகியும் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வராதது ஏன்? - மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை 

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தர விட்டு 12 ஆண்டுகளாகியும் இன்னும் முறையாக அமல்படுத்தப்பட வில்லை என அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட் டத்தை அமல்படுத்தக் கோரி சென் னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந் திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக் கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘ஹெல்மெட் தொடர் பாக உயர் நீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன சோதனையில் தலைமைக் காவலர்களும் ஈடுபட்டு வரு கின்றனர். சிசிடிவி மூலம் கண்காணித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஆங்காங்கே போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “கட்டாய ஹெல்மெட் சட் டத்தை அமல்படுத்த உத்தரவிட்டு 12 ஆண்டுகளாகியும் இன்னும் முறையாக அமல்படுத்தப்பட வில்லை. இதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங் களின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனைக்குரியது.

தற்போது 80 முதல் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவதாக கூறுவதை ஏற்க முடியாது. பின்னால் அமர்ந்திருப்பவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவ தில்லை. ஏற்கெனவே ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எத்தனை பேர்? படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என அறிக்கை கேட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

மேலும் இந்த கண்டிப்பான நடைமுறை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே உள்ளது. இதர பகுதிகளில் பின்பற்றப்படுவதில்லை. எனவே ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் விபத்தில் சிக்கியுள்ளனர்? எத்தனை பேர் பலியாகியுள்ளனர் போன்ற விவரங்களை மாவட்ட வாரியாக டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை சென்னை போக்குவரத்து துணை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும்” என எச்சரித்து வழக்கை செப்.5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x