பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி 

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி 
Updated on
1 min read

சென்னை

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்துக்கு பல கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டப் பட்டு வருவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அப் பகுதியைச் சேர்ந்த ரங்கன், அண்ணாமலை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கை கடந்த 2017-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறி ஞர் ஆணையரை நியமித்து உத்தர விட்டு இருந்தது. அதன்படி வழக்கறி ஞர் ஆணையர் அந்த இடத்தை ஆய்வு செய்து பொதுப்பாதையை ஆக்கிர மித்து கட்டிடம் கட்டப்படவில்லை என அறிக்கை தாக்கல் செய்தார். நடிகர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரனும், அந்த கட்டிடம் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில்தான் கட்டப்படுகிறது. பாதை ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை எனக்கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். அதையடுத்து, நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையி்ல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நடிகர் சங்கம் கட்டப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in