Published : 29 Aug 2019 07:59 AM
Last Updated : 29 Aug 2019 07:59 AM

வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். உடன், துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கோ.கணேசன்.

சென்னை

வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் வடபழனி பணிமனை யில், கடந்த மாதம் 28-ம் தேதி எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில், சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட 8 பணியாளர்களில் கே.சேகர் (49), பி.பாரதி (33) ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல் லும் வழியில் உயிரிழந்தனர். காய ம் அடைந்த 6 பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு, பூரண சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பி உள்ளனர்.

இதற்கிடையே, போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். இந்த நிகழ்வின்போது, போக்கு வரத்துத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கோ.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், உயிரிழந்த பணியாளர்கள் இரு வரது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர் களுக்கு தலா ரூ.50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும், உயிரிழந் தவரின் குடும்பத்தினர் ஒருவருக்கு சிறப்பு நிகழ்வாக தகுதியின் அடிப்படையில் அரசு போக்கு வரத்துக் கழகத்தில் பணி வழங்க வும் முதல்வர் கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x