

சென்னை
இந்து அமைப்பின் தலைவர்கள் கொலை வழக்குகளில் கைது செய்யப் பட்ட பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிறை கைதிகளுக்கு ஒவ்வொரு வாரமும் குறை தீர்ப்பு முகாம் நடத் தப்படும். இதற்கு தலைமை ஏற்கும் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் பன்னா இஸ்மாயிலும் பிலால் மாலிக்கும் மனு அளிப்பதில்லை என்றும் உயர் அதி காரிகளிடம் அவர்கள் சார்பாக நேரடி யாக சிறையில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பிட்டு மனு அளிப்பதாகவும் அதில் கூறப்படுகிறது.
இருவரும் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு பிரிவுக்கு சிறை காவலர் களுடன் சென்ற கண்காணிப்பாளர் செந்தில்குமார், அவர்களிடம் ஏன் தன்னி டம் மனு கொடுக்கவில்லை என கேட்ட தாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப் பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கைதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தாக்கியதாகக் புழல் காவல் நிலையத்தில் சிறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.