

சென்னை
புளியந்தோப்பு பகுதியில் ஸ்டீபன் சன் சாலையில் சாலையோரங்களில் விதிகளை மீறி மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து 5,400 மூன்று சக்கர மிதிவண்டிகள் மூலமாக குப்பைகள் பெறப்பட்டு, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 500 குப்பை தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. பின்னர் அவை 370 காம்பாக்டர் வாகனங்கள் மூலமாக எடுத்து செல்லப்பட்டு, குப்பை மாற்றும் இடங்களில் கொட்டப்படுகின்றன. அங்கிருந்து 22 லாரிகள் மூலமாக பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த குப்பை மாற்றும் இடங் கள் அமைக்க மாநகராட்சி தலைமை யிடம், மண்டல அலுவலர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். அப்படி அமைக்கப்படும் இடம் பொதுமக்க ளுக்கு இடையூறு இல்லாத இடமாக வும், உரிய தடுப்புகள் ஏற்படுத்தப் பட்ட வளாகமாகவும் இருக்க வேண் டும். சாலையோரங்களில் அவற்றை அமைக்க முடியாது.
இந்நிலையில் மாநகராட்சி தலைமையிடம் எந்த அனுமதியும் பெறாமல் திரு.வி.க. மண்டல அதிகாரிகள், புளியந்தோப்பு பகுதி யில் உள்ள ஸ்டீபன்சன் சாலையில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அவை அதிக மாக சேர்ந்த பிறகு, சில தினங்கள் கழித்து பாப்காட் வாகனம் மூலமாக அகற்றப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால், அப்பகுதிக்கு அருகில் வசிப்போர் மற்றும் வணிக நிறுவனங் கள் நடத்துவோர் அப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்ற னர். அதனால் அந்த இடத்தில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், அந்த சாலை அறிவிக்கப்படாத குப்பை மாற்று இடமாக மாறி வருகி றது. இதைத் தடுக்க அப்பகுதியில் குப்பைகளை கொட்டி வைப்பதை மாநகராட்சி நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.