

சென்னை
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.
ஆகஸ்ட் 22-ம் தேதி முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் www.annauniv.edu என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.
முதல்நாளில், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 489 மாணவர்கள் பங்கேற்றனர். அதே நாளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் டான்செட் தேர்வில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. ன
ஒரு நாளைக்கு 8 சுற்றுகள் அடிப்படையில் 300 மாணவர்கள் கலந்துகொள்ளும் விதமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.28) முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடக்கும் இந்த கலந்தாய்வு, ஒற்றை சாளரம் முறையில் நேரடிக் கலந்தாய்வாக நடைபெறுகிறது.
இந்தாண்டு மொத்தம் உள்ள 303 கல்லூரிகளில் உள்ள 15,836 இடங்களுக்கு 6,268 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.