டார்னியர் விமானத்தை தேடும் பணி நிறுத்தம்: கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படும் - கடலோர காவல்படை ஐ.ஜி. தகவல்

டார்னியர் விமானத்தை தேடும் பணி நிறுத்தம்: கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படும் - கடலோர காவல்படை ஐ.ஜி. தகவல்
Updated on
1 min read

கடலோர காவல் படையின் டார்னியர் விமானம் விபத்துக் குள்ளான இடத்தில் இருந்து மனித எலும்பு கண்டெடுக்கப் பட்டுள்ளது. அது யாருடையது என கண்டறிவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படும்.

இதுகுறித்து சென்னையில் உள்ள கடலோர காவல் படை கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி-791’ என்ற டார்னியர் விமானம் கடந்த மாதம் 8-ம் தேதி விபத்துக்குள்ளானது. கடந்த வாரம் விமானத் தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத் தப்பட்டு விபத்துக்குள்ளான விமானத்தின் 2 இன்ஜின்கள் உள்ளிட்ட மேலும் சில பாகங்கள் மீட்கப்பட்டன.

மேலும், விபத்து நடந்த இடத்தில் மனித கால் கட்டை விரல் எலும்பு, ஒரு வாட்ச், கிழிந்த நிலையில் இருந்த விமானிகள் அணியும் உடை (டாங்கிரி), விமானிகள் அணிந்திருந்த சீட் கவருடன் கூடிய உயிர் காக்கும் ஆடை (லைப் ஜாக்கெட்) ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள் ளன. இதையடுத்து, தேடுதல் வேட்டை 13-ம் தேதி மாலை 6 மணி யுடன் நிறுத்தப்பட்டுவிட்டது.

மீட்கப்பட்ட பொருட்களை அந்த விமானத்தில் பயணம் செய்த சுபாஷ் சுரேஷ், வித்யாசாகர் மற்றும் சோனி ஆகிய விமானி களின் குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்து உறுதி செய்வார்கள். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டெ டுக்கப்பட்ட மனித எலும்பு தமிழக அரசு தடயவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப் பட்டு மரபணு (டிஎன்ஏ) சோதனை செய்யப்படும். இவ்வாறு ஐ.ஜி. சர்மா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in