

இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் குறித்து செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். இதில், துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
2014-15 நிதியாண்டில் மொத்தம் 45 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 35 லட்சம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 லட்சம் பேருக்கான பொருட்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2015-16-ம் ஆண்டிலும் 45 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பொருட்கள் பெறப்பட்டு வரு கின்றன. இந்த இரு ஆண்டு களில் மட்டும் இலவச பொருட் களுக்காக ரூ.3,797 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இதுவரை ரூ.8,667 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 1.30 கோடி மகளிருக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் முழு இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.