Published : 28 Aug 2019 10:17 AM
Last Updated : 28 Aug 2019 10:17 AM

சிக்னல்கள் பழுது, போக்குவரத்து காவலர்கள் பற்றாக்குறை: மாநகரில் வாகன ஓட்டுநர்கள் அவதி

டி.ஜி.ரகுபதி

கோவை 

சிக்னல்கள் பழுது, போக்கு வரத்து காவலர்கள் எண்ணிக்கை பற்றாக்குறையால் வாகன ஓட்டு நர்கள் கடும் அவதிக்குள்ளாகின் றனர்.

கோவை மாநகர போக்கு வரத்து காவல்துறை கிழக்கு, மேற்கு என இரு உட்கோட்டங் களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் உட்கோட்டத்திலும் தலா ஓர் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்களும் உள்ளனர். கிழக்கு உட்கோட்டத்தில் பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், காட்டூர், மேற்கு உட்கோட்டத்தில் போத்தனூர், ஆர்.எஸ்.புரம், கடைவீதி ஆகிய போக்குவரத்து காவல்நிலையங்கள் உள்ளன. மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மொத்தம் 62 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அதில், தற்போதைய நிலவரப்படி மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பு, மணி மேல்நிலைப் பள்ளி சந்திப்பு, அழகேசன் சாலை, ஒப்பணக்கார வீதி ஜக்கா பாய்ன்ட் உள்ளிட்ட இடங்களிலுள்ள சிக்னல்கள் பழுதாகியுள்ளன.

மாநகர காவல்துறை வசம் இருந்த சிக்னல்கள் பராமரிப்புப் பணி, கடந்த 2015-ம் ஆண்டு மாநகராட்சி வசம் மாற்றப்பட் டது. மாநகராட்சி நிர்வாகத்தினர், ஒப்பந்தம் மூலமாக தேர்வு செய் யப்பட்ட தனியார் நிறுவனத்திடம் சிக்னல் பராமரிப்பை ஒப்படைத் தனர். இந்நிலையில், பழுதான சிக்னல்களை சரி செய்யும் பணி தாமதமாக மேற்கொள்ளப்படு கிறது.

போக்குவரத்து காவலர்கள் பற்றாக்குறையால், சிக்னல் பழுதடைந்த சந்திப்புகள், முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் ஒழுங்குப்படுத்தும் பணியில் நிறுத்த காவலர்கள் இல்லை.

இதுதொடர்பாக சமூக ஆர் வலர்கள், மாநகர காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘போக்குவரத்து கிழக்கு உட்கோட்டத்தில் 180, மேற்கு உட்கோட்டத்தில் 150 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது கிழக்கு உட்கோட்டத்தில் 110, மேற்கு உட்கோட்டத்தில் 100 காவலர்கள் மட்டுமே உள்ளனர். இரு உட்கோட் டங்களிலும் சேர்த்து 120 காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒதுக்கப்பட்ட காவலர்களில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத் துக்கு 61, பீளமேட்டுக்கு 18, சிங்கா நல்லூருக்கு 18, ராமநாதபுரத் துக்கு 18, காட்டூருக்கு 60 பேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். மேற்கு உட்கோட்டத்தில் கடை வீதிக்கு 61, ஆர்.எஸ்.புரத்துக்கு 61, போத்தனூருக்கு 13 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

8 போக்குவரத்து காவல் நிலை யங்களில் இருந்துதான், மாநகரின் 15 சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி களுக்கு போக்குவரத்து காவலர் கள் அனுப்பி வைக்கப்படுகின்ற னர்.

இந்த எண்ணிக்கை ஒதுக்கப்பட்ட சமயத்தில், வாகன எண்ணிக்கை, போக்குவரத்து குறைவு. ஆனால், தற்போதைய சூழலில் மேற்கண்ட பகுதிகளில் வாகன எண்ணிக்கை, போக்கு வரத்து அதிகளவில் உள்ளது. இதற்கேற்ப, கிழக்கு, மேற்கு உட்கோட்டங்களில் போக்கு வரத்து காவலர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. இதனால், போக்குவரத்து போலீஸார் கடும் சிரமத்துடன் பணிபுரிகின்றனர்’’ என்றனர்.

மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும்போது, ‘‘மாநகர போக்குவரத்து காவல்துறையில் தற்போது போதுமான எண்ணிக் கையில் காவலர்கள் உள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பீளமேடு ஆர்.கே.மில் சந்திப்பு, ஹோப் காலேஜ், ரயில் நிலையம், காந்திபுரம், கணபதி உட்பட 10 இடங்களில், சிறப்பு பிரிவு களில் பணிபுரியும் 7 காவல் ஆய்வாளர்கள், 21 போலீஸார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.

இவர்கள், காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

மாநகர போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் பெருமாள் கூறும்போது, ‘‘போக்குவரத்து சிக்னல் பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன. ஆயுதப்படையில் இருந்து பதவி உயர்வின் மூலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காவலர்கள் போக்குவரத்து பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x