

நாமக்கல்
ராசிபுரம் அருகே திம்மநாயக்கன் பட்டி கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டும் திட்டத்தின்கீழ் முறைகேடுகள் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின்கீழ் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் மத்திய, மாநில அரசுகள் மூலம் குடியிருப்பு மற்றும் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத் தின்கீழ் கட்டப்படும் குடியிருப்புக ளுக்கு ரூ.1.70 லட்சமும், தனிநபர் இல்ல கழிப்பிடத் திட்டத்தின்கீழ் ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட திட்டங்களின்கீழ் எத்தனை வீடுகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள் ளன எனக்கேட்டு கே.முருகேசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். அதில், 27 குடியிருப்புகளும், 406 கழிப் பிடங்களும் கட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் அளித்த தகவலின் அடிப்படை யில் சம்பந்தப்பட்ட பயனாளிகளை முருகேசன் உள்ளிட்டோர் அணுகிய போது பெரும் அதிர்ச்சி காத்திருந் தது. கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான ஜி.கலை மணி என்பவருக்கு வீடு கட்டாம லேயே வீடு கட்டியதாக கடந்த ஓராண்டுக்கு முன்னர், அவரது சகோ தரர் பெயரில் ஆவணம் தயாரிக்கப் பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் வீட்டில் முன்புற சுவர் கதவு மட்டுமே உள்ளது. கத வைத் திறந்தால் பின்புறம் விவசாய தோட்டம் மட்டுமே உள்ளது.
இதுபோல், 3 நபர்களது பெய ரில் குடியிருப்பு கட்டியதாகக் கூறி பணம் எடுக்கப்பட்டது தெரியவந் தது. மேலும் இறந்தவர் பெயரில் வீடு கட்டியதாகக் கூறி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், கிராமத்தைச் சேர்ந்த 130 நபர்களின் பெயரில் கழிப்பிடம் கட்டியதாகக் கூறி தலா ரூ.12 ஆயிரம் வீதம் பணம் எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந் தது. இந்த தகவல் வெளியானதும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சி யர், எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த கே.முருகேசன் கூறுகை யில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் முறைகேடு நடந்தி ருப்பது தெரியவந்தது. இதுதொடர் பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி கூறுகை யில், உதவி இயக்குநர் தலைமை யில் விசாரணை நடத்த குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். 15 தினங்களில் அக்குழு அறிக்கை தரும். அதன்பேரில் ஆட்சி யர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.