Published : 28 Aug 2019 08:46 AM
Last Updated : 28 Aug 2019 08:46 AM

பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் - தமுமுக நிர்வாகி மீது வழக்கு பதிய போலீஸார் தீவிரம்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக் குடிகாட்டில் அண்மையில் நடை பெற்ற தமுமுக தெருமுனை விளக் கக் கூட்டத்தில் பேசும்போது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த இயக்கத்தின் தலைமைக் கழக பேச்சாளர் மீது குற்ற வழக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள முத்தலாக் தடை சட்டம், என்.ஐ.ஏ, யுஏபிஏ சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு நீக்கம் மற்றும் கும்பல் கொலை நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த ஆக.23-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற் றது. இதில் சிறப்பு அழைப்பாளரா கக் கலந்து கொண்ட அவ்வமைப் பின் தலைமைக் கழக பேச்சாளர் எம்.முகமது ஷரீப் பேசியதாக, ஒரு விடியோ பதிவு சமூக வலைதளங் களில் பரவி இப்போது சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.

அந்த விடியோ பதிவில், ‘எங்கள் கொள்கை எதிரி பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்தான். இவர்களால் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட் டும் அல்லாமல் நாட்டின் பிற சமூகத் தவர்களும் என்பதால் அவர்களுக் காகவும் பேசுகிறோம். நாங்கள் முஸ் லிம்களுக்காக மட்டும் பேசுவதாக நினைத்திருந்தால் முத்தலாக் சட் டத்தை கொண்டு வந்த உடனே பிரத மர் மோடியின் தலையை எடுத்திருப் போம். உள்துறை அமைச்சர் அமித் ஷா உயிரோடு இருந்திருக்க மாட் டார். இந்நேரம் நாடாளுமன்றம் நாடாளுமன்றமாக இருந்திருக் காது. உளவுத்துறையினர் குறித்துக் கொள்ளுங்கள்...’ என்று முக மது ஷரீப் பேசுவதாக அமைந்தி ருக்கிறது.

சமூக வலைதளங்களில் பரவிய இந்த சர்ச்சைப் பதிவு குறித்து போலீஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.

மங்கலமேடு போலீஸாரிடமி ருந்தும், பெரம்பலூர் மாவட்ட உள வுப் பிரிவு போலீஸாரிடமிருந்தும் அந்த கூட்டத்தில் ஷரீப் பேசிய பேச் சின் முழு வீடியோவையும் சென்னை காவல்துறை தலைமையகத்தில் கேட்டுப் பெற்றுள்ளதாகவும், வீடி யோ பேச்சின் முழு விவரங்களையும் ஆய்வு செய்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று வழக்கு தொடர ஏற்பாடுகள் நடத்து வருவதா கவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம் இப்படி ஒரு சர்ச்சை பேச்சை யார் பேசியிருந்தாலும் தமு முக அமைப்பின் முக்கிய நிர்வாகி கள் அதை வரவேற்க மாட்டார்கள் என்றும், முகமது ஷரீப் பேசிய விவரங்கள் குறித்து முழுமையாக விசாரித்து அவர் மீது தமுமுக சார்பில் நடவடிக்கை எடுக்க ஆலோ சனை நடந்து வருவதாகவும் தமுமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x