

நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக அழிக்கால் மீனவ கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் சமீப கால மாக கடல் சீற்றமும், சூறைக்காற் றும் அதிகரித்துள்ளதால், மீனவ கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள் ளாகி வருகின்றன. ராஜாக்கமங் கலத்தை அடுத்துள்ள அழிக்கால் மீனவ கிராமம் இப்பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இக் கிராமத்தில், கடந்த வாரம்தான் கடல் நீர் புகுந்தது. 70-க்கும் மேற் பட்ட வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர். கடல் அரிப்பினால் வீடுகளுக்குள் மணல் குவிந்தது. இதனால், மீனவ குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை வீடுகளில் குவிந்திருந்த மணலை அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், அழிக்காலில் கடல் நீர் உட்புகுந்தது. கடல் அலை வேகமாக எழும் நேரங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதும், பின்னர் வெளியேறுவதுமாக இருந் தது. குழந்தைகளுடன், அச்சத்தில் அலறியபடி மக்கள் வெளியேறினர். கடல் அலை வேகமாக எழுந்ததால் வீடுகளுக்குள் நேற்றும் மணல் குவிந்தது.
முக்கிய உடமைகளை மட்டும் வீடுகளில் இருந்து எடுத்துக் கொண்டு, அழிக்காலில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், உறவினர் வீடுகளி லும் தஞ்சம் அடைந்தனர்.
அழிக்கால் கிராமத்தில் கடலரிப்பு தடுப்புச் சுவரை தாமத மின்றி அமைத்து தர மீனவர் கள் வலியுறுத்தினர். தூத்தூர், நீரோடி, வள்ளவிளை, இரவிபுத்தன் துறை போன்ற பகுதிகளிலும், நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.