

சேலம்
திராவிடர் கழகத்தின் நூற்றாண்டுக் குள் சாதி, மதவெறியற்ற, மனித நேயம் மிக்க சமுதாயத்தை படைக்க வேண்டும் என திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் அதன் தலைவர் கி.வீரமணி பேசினார்.
திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் புள்ளையண்ணன் வரவேற்றார். மாநாட்டை, பொத்தனூர் சண்முகம் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். ‘திராவிடர் கழக வரலாறு’ என்ற நூலை வெளியிட்டு திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசினார்.
மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: சாதி ஒழிப்பு, தீண்டாமை என கொள்கைக்கான போராட்டங்களில் திராவிடர் கழகம் வெற்றி பெற்றுள் ளது. ஆனால், அதற்கான போரில் இன்னமும் வெற்றி பெறவில்லை. பெரியார் காலத்தில், திராவிடர் கழகத்துக்கு பெரிய எதிரிகள் இருந்தனர். ஆனால், அவர்கள் நாணயமானவர்கள். இன்றைக்கு இருப்பவர்கள் சூழ்ச்சிக்காரர்கள்.
திராவிடம் என்பது பண்பாட்டு அரசியல். தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடன் என்பது இனப் பெயர். தமிழ் பேசுவோர் அனை வரும் தமிழராகிவிட முடியாது.
மொழி, மதம் வேறாக இருந்தா லும் அவர்கள் இனத்தால் திராவிடர் கள்தான். அரசியல் ரீதியாக திமுக போராடும். அதற்கு திராவிடர் கழகம் துணை நிற்கும். திராவிடர் கழகத் தின் நூற்றாண்டுக்குள் சாதிகளை ஒழிப்போம். மதவெறியை நீக்கு வோம். மனிதநேயத்தை வளர்ப் போம் என்றார்.
மாநாட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பேசினர். தேசிய கல்விக் கொள்கை வரைவு, தேசிய புலனாய்வு திருத்த மசோதா ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.