மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக 2,449 ஆசிரியர்களை நியமிக்கலாம்: பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அனுமதி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்ப பெற்றோர் ஆசிரியர் கழகத் துக்கு அரசு அனுமதி அளித் துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

பள்ளிக்கல்வித் துறை வெளியிட் டுள்ள அரசாணையின்படி, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி களில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட் டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளது. பதவி உயர்வு வழங்கு வதற்கான நடவடிக்கை நிறை வடைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால், நடப்பு கல்வியாண் டில் பொதுத் தேர்வு எழுதும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர் களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்வ தற்கு வசதியாகவும், அரசு பள்ளி களில் மாணவர்கள் தேர்ச்சி கருதி யும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி யான நபர்களைக் கொண்டு தற்காலிகமாக நிரப்பலாம்.

தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 2,449 முதுகலை ஆசிரியர் காலிப் பணி யிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களைத் தேர்வு செய்து நிரப்பும் வரை ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப் படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மட்டும் அந்தந்த ஊர்களில் அந்த பள்ளி அமைந் துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படு கிறது.

அவ்வாறு தேர்வு செய்யும் போது, “இது முற்றிலும் தற்காலிக மானது” என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரி விக்க வேண்டும். தமிழ், ஆங்கி லம் உள்பட 11 பாடங்களில் மட் டுமே காலியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக முதுகலை ஆசியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப் படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in