42 பள்ளிகளில் ரூ.72 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு; விருதுநகரில் புதிய தொழில் பூங்கா: காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்

42 பள்ளிகளில் ரூ.72 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு; விருதுநகரில் புதிய தொழில் பூங்கா: காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்
Updated on
2 min read

சென்னை

விருதுநகரில் ரூ.15 கோடியில் தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்காவுக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதேபோல் ரூ.72 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 42 பள்ளிக் கட்டிடங்களையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி, தாமரைகுளம்- பொட்டல் குளம் கிராமங்களுக்கு இடையில் 102 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்காவுக்கு முதல்வர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உலக முதலீட் டாளர்கள் மாநாட்டில், புதிய ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது. அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த பதனிடுதல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.151 கோடியே 86 லட்சம் மதிப்பில், 1.5 மெகாவாட் திறன் கொண்ட கோ-ஜென் அமைப்பதற்கான விரி வான திட்ட அறிக்கையை தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமத் தால் மத்திய அரசுக்கு சமர்ப்பிக் கப்பட்டது.

மேலும் மத்திய அரசின் 50 சதவீத மானியம் மற்றும் தமிழ் நாடு அரசின் 25 சதவீத மானியம் பெறுவதற்காகவும் அறிக்கை சமர்ப் பிக்கப்பட்டு, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கொள்கை அள விலான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மூலம் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 35 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட் டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டி டங்கள் மற்றும் ஆய்வக கட்டி டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

வகுப்பறை கட்டிடங்கள்

மேலும் கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, சிவ கங்கை, தஞ்சை, திருப்பூர், திரு வாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் ரூ.52 கோடியே 3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கடலூர், புதுக் கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 13 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.17 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் மதிப் பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டி டங்கள் என ரூ.72 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக்கட்டி டங்களை முதல்வர் திறந்து வைத் தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் ஓ.எஸ்.மணியன், கே.ஏ.செங் கோட்டையன், ஆர்.துரைக் கண்ணு, தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர் குமார் ஜெயந்த், இயக்குநர் மு.கருணா கரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் ச.கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநர் பெ.குப்புசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in