Published : 28 Aug 2019 08:01 AM
Last Updated : 28 Aug 2019 08:01 AM

செய்யாத தவறுக்கு அபராதம் வசூலித்து இயக்குநரை தரக்குறைவாக பேசிய போக்குவரத்து காவலர்: நடவடிக்கை எடுப்பதாக இணை ஆணையர் உறுதி

சென்னை

திரைப்பட இயக்குநரை தரக்குறை வாக பேசிய போக்குவரத்து காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங் களை இயக்கியவர் ரமணா சந்திரசேகர். இவர் சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வருகிறார். போக்குவரத்து காவலர்கள் இவ ருக்கு அபராதம் விதித்த சம்பவம் பற்றி சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் இவர் பதிவிட, அது பரபரப்பானது.

இதுகுறித்து இயக்குநர் ரமணா கூறியதாவது:

நேற்று முன்தினம் காலையில் நான், என் மனைவி மற்றும் மகளு டன் காரில் சென்றபோது சாந்தோ மில் என் வீட்டருகில் சாலை விதி களை மீறுபவர்களிடம் இருந்து போக்குவரத்து போலீஸார் அப ராதம் வசூலித்துக்கொண்டு இருந்த னர். அப்போது மிதமான வேகத்தில் வந்த என்னை வழிமறித்த காவலர் ராமர், காரை நிறுத்தச் சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக கூறி அபராதம் கட்டச் சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது ஓட்டுநர் உரிமத்தை வாங்கிக் கொண்டார். பின்னர் அங்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் குமார் என்பவரிடம் அதைக் கொடுத்து எனக்கு அபராதம் விதிக் கச் சொன்னார்.

நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்ட மறுத்தேன். மேலும் நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் தெரிவிக்க வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப் போது உதவி ஆய்வாளர் குமார், என்னை பார்த்து, ‘‘ஏய்.. தள்ளி நின்னு பேசுடா. மேல எச்சில் படப் போகுது... உன் நோய் எனக்கு ஒட் டிக்கும்’’ என்றார். மேலும், காவலர் ராமரிடம், ‘‘பாதியிலேயே சாவப் போறவனையெல்லாம் கூட்டிக் கிட்டு வந்து என் உயிர ஏன் எடுக் குற’’ என்று கூற, நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். அதைத் தொடர்ந்து எனக்கும், போலீஸாருக் கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மற் றொரு உதவி ஆய்வாளர், என்னை சமாதானப்படுத்தி அபராதம் விதிக் காமல் அனுப்பி வைத்தார். நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசென்ஸ் உதவி ஆய்வாளர் குமாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்துக்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போக வேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசென்ஸ் வாங்க அனுப்பினேன்.

ஆனால், உதவி ஆய்வாளர் குமார், எனது மகளை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தார். மேலும் அவளிடம், ‘‘உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசென்ஸை தரு வேன்’’ என்று கூற, அவளும் அபராதம் செலுத்தி, லைசென்ஸை வாங்கி கொண்டு வந்தாள். மனிதாபி மானம், இரக்கம், மரியாதை என எதுவுமே இல்லாத இதுபோன்ற நபர்களை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன்.

சராசரி வெகுஜனத்திடம் இவர் களின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன், இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் ஷோபனா ஆகியோர் ரமணாவின் வீட்டுக்கு நேரில் சென்று நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், உதவி ஆய்வாளர் குமார், காவலர் ராமர் ஆகியோரி டமும் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x