அரசு டாக்டர்கள் போராட்டம் வாபஸ் 

அரசு டாக்டர்கள் போராட்டம் வாபஸ் 
Updated on
1 min read

சென்னை

அரசு டாக்டர்கள் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழகம் முழு
வதும் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ஏழை நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து டாக்டர்களின் கோரிக்கைகளை தொடர்பான பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அரசு தரப்பில் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் நடராஜன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சுவாதி, அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் டாக்
டர்கள் தரப்பில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.பாலகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் லட்சுமி நரசிம்மன், அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரேசன் உட்பட 10 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் அரசுடாக்டர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டார்.

6 வாரத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அரசுதரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசு டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in