Published : 28 Aug 2019 07:47 AM
Last Updated : 28 Aug 2019 07:47 AM

காஷ்மீரில் ஊடக சுதந்திரத்தை பறிப்பது ஜனநாயக விரோதம்: தமிழக பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்

சென்னை

காஷ்மீரில் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்திய பிரஸ் கவுன்சிலின் நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானது என்று தமிழகத்தை சேர்ந்த பத்திரிகை யாளர் அமைப்புகள், சமூக செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக செயல்பட்ட இந்திய பிரஸ் கவுன்சிலின் செயலை கண்டித்து, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், நெட்வொர்க் ஆஃப் உமன் இன் மீடியா, சென்னை ஆதரவுக் குழு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பத் திரிகையாளர் சந்திப்பு சென்னை யில் நேற்று நடைபெற்றது.

இதில் ‘இந்து’ என்.ராம், கர் னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் வ.கீதா, இந்திய பிரஸ் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் கே.அமர்நாத், வழக் கறிஞர் பி.எஸ்.அஜிதா உள்ளிட் டோர் பங்கேற்று பேசியதாவது:

ஆகஸ்ட் 23-ம் தேதி இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான சி.கே.பிரசாத், காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக உலவுவதை கட்டுப்படுத்துவதையும், ஊடகங் கள் மீதான தடையையும் ஆதரித்து தன்னிச்சையான பிரமாண பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நீதிபதி பிரசாத்தின் இந்த நடவடிக்கை, 1978-ம் ஆண்டின் பிரஸ் கவுன்சில் சட்டம் மற்றும் 1979-ம் ஆண்டின் பிரஸ் கவுன்சில் வழிகாட்டு நெறி முறைகள் ஆகியவற்றுக்கு எதி ரானது.

காஷ்மீரில் நிலவும் சூழல் அசாதாரணமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீர் மக்கள் அனைவரையும் மத்திய அரசு சிறை வைத்துள்ளது. இந்திய அரசை ஏற்றுக்கொண்ட அரசியல் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். பள்ளி கள், காவல் நிலையங்கள் மூடப்பட் டுள்ளன. அனைத்து வகையான தொலைத்தொடர்பும் துண்டிக்கப் பட்டுள்ளன. ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்படாம லேயே இவை எல்லாம் செய்யப் பட்டுள்ளன.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதற்காக அர சியல் சாசனம் வழங்கிய பாதுகாப்பு களில் ஒன்றுதான் சுதந்திரமான ஊடகம். காஷ்மீரில் மூன்று வாரங் களுக்கும் மேலாக ஊடகங்களைத் தடை செய்து அரசு ஒற்றைச் செய்தியை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

பிரஸ் கவுன்சிலின் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாண பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும். காஷ்மீரில் உள்ள ஊடக அலுவலகங்களுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கவும், ஊடகவியலாளர்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வும் இந்திய பிரஸ் கவுன்சில், இந்திய அரசை வலியுறுத்த வேண் டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின்னர், ‘இந்து’ என்.ராம் கூறும்போது, ‘‘ஊடகவியலாளர் களின் எதிர்ப்பு காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் குறித்து, மீண்டும் வலியுறுத்தப் போவதில்லை என்று இந்திய பிரஸ் கவுன்சில் உறுப்பினர்களுக்கு, பிரஸ் கவுன் சில் தலைவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஊடகத் துறை யினரின் எதிர்ப்பால் பிரஸ் கவுன் சில் தலைவர் தனது நிலை யில் இருந்து பின்வாங்கி இருப் பது வரவேற்கத்தக்கது. இது, நாம் முன்னெடுத்துச் செல்லும் போராட் டம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை தருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x