

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 98 சதவீதம் ஊரகப் பகுதி களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் வழங்கப்படுவதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை கிடைக் கும். வரும் அக்டோபர் மாதம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு மழை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
இந்த பருவமழைக் காலங்களில் தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச் சல் போன்ற தொற்று நோய் கள் பரவாமல் தடுக்க உள் ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நட வடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த ஆண்டுக்கான நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளிடையே பேசியதாவது:
தமிழகத்தில் வரும் மழைக்காலத் தில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் வராமல் தடுக்க வேண்டும்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் 98 சதவீத ஊரக பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் குழாய் மூலம் வழங்கப்படுகிறது. மழை நீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். பள்ளி,கல்லூரி மாணவர்களை தொற்று நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.