

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தில் கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டு புதிய சிலை நிறுவப்பட்டது. கலவரத்துக்கு காரணமான இருதரப்பையும் சேர்ந்த 28 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் வேதா ரண்யம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக் கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. நேற்று முன்தினம் மாலை வேதாரண்யம் காவல் நிலையம் அருகே பாண்டியின் கார் மீது, பின்னால் வந்த ராமச்சந்திரன் தரப்பைச் சேர்ந்த ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதிய தாக தெரிகிறது. இதனால், இருதரப் புக்கும் இடையே தகராறு ஏற்பட் டது. இதில் ராமச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டதுடன், பாண்டியின் காருக்கு தீ வைக்கப்பட்டது.
காவல் நிலையத்தின் அருகே நடைபெற்ற தகராறு மோதலாகி பின்னர் கலவரமாக மாறியது. அப் போது, சிலர் அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலையை சேதப்படுத் தினர். காவல் நிலையத்தின் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரத்தின்போது, பாபுராஜ், சரத் குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
இந்த திடீர் கலவரத்தால் பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அந்தப் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டன. பதற்றமான சூழ்நிலை நிலவியதையடுத்து கலவரத்தை அடக்க ஏராளமான போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி. டி.கே.ராஜசேகரன் ஆகி யோர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையிலும், நேற்று முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் நேற்றும் கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் நேற்று வழக்கம்போல இயங்கின.
இதனிடையே, மோதல் தொடர் பாக இருதரப்பையும் சேர்ந்த 28 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் குரல் பதிவு ஒன்றை வெளியிட்ட தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் லோகநாதன், வேதாரண்யத்தில் 750 போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதல்வர் உடனடி நடவடிக்கை
சம்பவ இடத்தை பார்வையிட்ட தஞ்சை டிஐஜி லோகநாதன், அம் பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட அதே இடத்தில் உடனடியாக புதிய சிலையை அமைக்க ஆலோசனை கூறினார். இதை ஏற்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் பேசி னார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வேறு நிகழ்ச்சிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை வேதாரண்யத்துக்கு அனுப்ப முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை தமிழக அரசின் சார்பில் புதிய அம் பேத்கர் சிலை நிறுவப்பட்டது. போலீ ஸார் சிலைக்கு பெயின்ட் அடித்து, மாலை அணிவித்தனர்.
தலைவர்கள் கண்டனம்
வேதாரண்யம் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநில செயலர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.