மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததால் 2 அரசு பள்ளிகள் மூடப்படாமல் தவிர்ப்பு: ஆசிரியர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு

புரசைவாக்கம் தாணா தெருவில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகளை பாராட்டுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.
புரசைவாக்கம் தாணா தெருவில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகளை பாராட்டுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.
Updated on
1 min read

சென்னை

சென்னையில் மாணவர்கள் எண்ணிக் கையை அதிகரித்து, மூடும் நிலையில் இருந்து 2 அரசுப் பள்ளிகளை மீட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டி உள்ளார்.

சென்னை புரசைவாக்கம் தாணா தெரு வில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, எழும் பூர் வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது பள்ளி ஆகிய 2 பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அப்பள்ளிகளை மூடவேண்டிய நிலை உருவானது.

இந்நிலையில், பள்ளி ஆசிரியைகளின் முயற்சியால் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததால், மூடும் நடவடிக்கையில் இருந்து அப்பள்ளிகள் தவிர்க்கப்பட்டன.

இதை அறிந்த ஜி.ராமகிருஷ்ணன் அப் பள்ளிகளுக்கு சென்று, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் என்.விஜயதாரணி, பி.ஏ.ஜபின் மற்றும் ஆசிரியைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

20-க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் அரசு பள்ளிகளை மூடவேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. தமிழகத்தில் இதுவரை 200 பள்ளிகளை மூடிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. சில பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

புரசைவாக்கம் தாணா தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 2013 நிலவரப் படி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 48. அப்பள்ளி ஆசிரியைகளின் முயற்சியால் மாணவர் எண்ணிக்கை இந்த ஆண்டு 281 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, எழும்பூ ரில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளி 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 2010-ல் வெறும் 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள், சில அறக்கட்டளைகளின் முயற்சியால் மாணவர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்துசெல்ல அறக்கட்டளை சார்பில் வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in