

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையை அடுத்த சித்த மல்லி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ரூ.40 லட்சம் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தானமாக வழங்கினார்.
சித்தமல்லியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு அதிகமானோர் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறை போதிய நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டித் தர முன்வந்த போதும் அதற்கான நிலம் இல்லாத நிலை இருந்துவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அதே ஊரைச் சேர்ந்தவரும் முன்னாள் எம்பியுமான திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தார்.
அதன்படி, ஏ.கே.எஸ்.விஜய னின் தந்தை முன்னாள் திமுக எம்எல்ஏ ஏ.கே.சுப்பையாவின் வாரிசுகளான அவரது மனைவி சுப்பம்மாள், மகள்கள் கல்பனா, யமுனா, மகன்கள் கார்மேகம், விஜயன் ஆகியோர் முத்துப் பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்து, தானம் வழங்கவுள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். பத் திரத்தை திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஸ்டான்லி மைக் கேல் பெற்றுக் கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அமைவதற்காக நிலம் வழங்கிய ஏகேஎஸ்.விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.