

திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடி அகழாய்வில் செங்கலால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை துணை இயக் குநர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு நடைபெறுகிறது.
700-க்கும் மேற்பட்ட பொருட்கள்
இதுவரை முருகேசன் என்பவர் உட்பட 5 பேரின் நிலங்களில் 27 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிக அளவில் சுவர் களும் கிடைத்தன.
அப்பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் குழிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பழமையான சுவர்கள் சேதமடைந்தன.
குழிகளில் இருந்து மழை நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் அகழாய்வுப் பணி தொடங் கியது.
இதில் முருகேசனின் நிலத்தில் செங்கற்களால் கட்டப் பட்ட குளியல் தொட்டி கிடைத் துள்ளது. இது 3 அடி உயரம், 3 அடி நீளம், இரண்டரை அடி அகலம் கொண்டதாக இருந்தது.