டார்னியர் விமானத்தின் 2 இன்ஜின்கள் மீட்பு: பெங்களூருவில் கருப்பு பெட்டி ஆய்வு

டார்னியர் விமானத்தின் 2 இன்ஜின்கள் மீட்பு: பெங்களூருவில் கருப்பு பெட்டி ஆய்வு
Updated on
1 min read

காணாமல்போன ‘டார்னியர்’ விமானத்தில் இருந்து 2 இன்ஜின்கள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் கடந்த ஜூன் 8-ல் திடீரென காணாமல் போனது. 34 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி பிச்சாவரம் அடுத்த பரங்கிப் பேட்டை கடற்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கடந்த வாரம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், விமானத்தின் 2 இன்ஜின்கள், இன்ஜினை இயக்க உதவும் உந்துவிசை கருவிகள், வால் பகுதி, பைலட் அறையில் உள்ள குரல் பதிவு சாதனம், லேண்டிங் கியரின் ஒரு பகுதி, உயிர் காக்கும் லைப் ஜாக்கெட் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சர்மா, சென்னை யில் நேற்று மாலை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

விமானிகள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனினும், அவர் களைக் கண்டுபிடிக்கும் பணி நடக்கிறது. கருப்பு பெட்டியை பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in