Last Updated : 26 Aug, 2019 03:04 PM

 

Published : 26 Aug 2019 03:04 PM
Last Updated : 26 Aug 2019 03:04 PM

வெளிமாநிலங்களில் நிரந்தரமாகக் குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது: மருத்துவக் கலந்தாய்வு வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

எம்.பி.பி.எஸ் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளி மாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தமிழக அரசு மற்றும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளி மாநிலத்தவர் 126 பேர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அதில்,"தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 2744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். எனவே,தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் .

மேலும் தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

இந்த மனு ஏற்கனேவே விசாரணைக்கு வந்தபோது, வெளி மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 மாணவர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்தும், எதன் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொண்டனர் என்பது குறித்தும் அவர்களின் இருப்பிட சான்று குறித்தும் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) வழக்கு சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் முறையாக பரிசீலிக்கப்பட்ட பிறகே, கலந்தாய்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, முறையாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தாலும், சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், அது குறித்த விபரங்களை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.

அதனடிப்படையிலேயே 126 பேரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அரசு தரப்பு மற்றும் கலந்தாய்வில் அழைக்கப்பட்ட பிற மாநில மாணவர்கள் என கூறப்படும் 126 பேரும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x