Published : 26 Aug 2019 09:53 AM
Last Updated : 26 Aug 2019 09:53 AM

இயற்கை உரம் விழிப்புணா்வு அதிகாிப்பு: நாட்டு கிடைமாடு எருவுக்கு கேரள வியாபாரிகளிடம் வரவேற்பு

மதுரை

கேரளாவில் விவசாயத்துக்கு இயற்கை உரங்களையே பெருமளவில் பயன்படுத்துவதால் அந்த மாநில வியாபாரிகள், தமிழகத்துக்கு வந்து நாட்டுக் கிடைமாடுகளின் எருக்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், குரண்டியைச் சேர்ந்த விவசாயி வைரமுத்து (60). இவர், ஆயிரம் நாட்டு மாடுகள் மூலம் கிடைபோடும் தொழில் செய்கிறார். இயற்கை உரங்களின் தேவையறிந்து அழைக்கும் விவசாயிகளின் நிலங்களில் கிடை அமைத்து வருகிறார்.

தற்போது தண்ணீர் இருக்கும் இடங்களைத் தேடி கிடை போடுகிறார். திருப்பரங்குன்றம் பகுதி நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் தற்போது கிடை அமைத்து வருகிறார்.

தற்போது கேரளாவில் விவசாயத்துக்கு இயற்கை உரங்களையே இடுவதால் அங்கு தேவை அதிகரித்துள்ளது. அதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாட்டு மாடு சாண எருக்களை கேரள விவசாயிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து வைரமுத்து கூறியதாவது:

பல தலைமுறையாக நாட்டு மாடுகள் மூலம் கிடை அமைத்து வருகிறோம். நாட்டு மாடுகள் வைத்துள்ளோர் எங்களிடம் ஒப்படைத்து பராமரிக்கச் சொல்லி அதற்காக ஆண்டுக்கு ஒரு தொகையை கூலியாக கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆயிரம் நாட்டு மாடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் தற்போது திருப்பரங்குன்றத்துக்கு வந்துள்ளோம். அங்கு தண்ணீர் தரும் விவசாயிகளின் நிலத்தில் இலவசமாக கிடை அமைத்து வருகிறோம். ஒரு நாளைக்கு ஆயிரம் மாடுகள் கிடை போடுவதற்கு ரூ.1,500 ஊதியம் கிடைக்கும். மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் மண்ணை வளப்படுத்த கிடை அமைத்து வருகின்றனர்.

உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கியதுபோக, மீதமுள்ள சாணங்களை எருவாக்கி வைத்துள்ளோம். இதை அறிந்த கேரளா வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். 50 கிலோ எருவை ரூ.100-க்கு கொடுக்கிறோம் என்று கூறினார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x