

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே சட்ட விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன் மனைவி வள்ளி (42). இவர் கள்ளத் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்களை இலங்கை மற்றும் வெளிமாநிலங்களுக்கு கடத்து வதாக கிராம நிர்வாக அலு வலர் அசோக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அவர் உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில், காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் பிரப்பன்வலசை பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள வள்ளியின் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கைத்துப்பாக்கி (ஏர் பிஸ்டல்) ஒன்றை பறிமுதல் செய்து வள்ளியைக் கைது செய் தனர்.
அவரிடம் நடத்திய விசாரணை யில் கோயமுத்தூரைச் சேர்ந்த சிலரிடம் கைத்துப்பாக்கியை வாங்கியதாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கோயமுத் தூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர் களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே ஒரு போலித் துப்பாக்கி பறிமுதல்
வள்ளியின் கணவர் பூமிநாதன் ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வள்ளியின் வீட்டில் இருந்து போலி கைத்துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்