Published : 26 Aug 2019 09:44 AM
Last Updated : 26 Aug 2019 09:44 AM

ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக உள்ளது: தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டம்

கடலூர்

ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக உள்ள தாக தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு ராஜீவ் காந்தி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நகர் பெரியசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிரத்தனம், நஜிர்அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சிரிவல்லபிரசாத் கலந்து கொண்டு பேசுகையில், "நாட்டின் முன்னேற்றத்திற்காக அதிகாரத்தை ராஜீவ்காந்தி பயன்படுத்தினார். ஆனால் நாட்டு மக்களை பிளவு படுத்தவே மோடி அரசு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்" என தெரிவித்தார். இதில் தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:

இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் முற்றிலும் மாறிவிட்டது. ஜனநாயகம் மறந்து சர்வாதிகாரமாகி விட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் மத்திய அரசின் முக்கிய துறைச் செயலாளர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் கையெழுத்து இட்ட பின்புதான் ப.சிதம் பரம் கையெழுத்திட்டார். அந்த 6 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ப.சிதம்பரம் மீது கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன்.

மோடி,காங்கிரஸ் கட்சியை சீரழிக்க நடவடிக்கை எடுக்கிறார். இதற்கெல்லாம் காங்கிரஸ் படியாது. இந்திய ஜனநாயகத் திற்கு எதிராக பாஜக உள்ளது என தெரிவித்தார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x