

புதுக்கோட்டை
சர்வதேச நாடுகளை எதிர்நோக்க வைக்கும் அளவுக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் அமைந்துள்ளது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: 2008-ல் நிலவுக்கு சந்திரயான்1 விண்கலம் அனுப்பியபோது, நம்முடைய விண்கலம் 7-வதாக இருந்தது. எல்லோரும் அனுப்பும் இடத்துக்குதானே இதுவும் செல்கிறது என்றுதான் பேசப்பட்டது. ஆனால், நிலவில் நீர் இருக்கிறது என்று அந்த விண்கலம் மூலம் கண்டறியப்பட்டது. இந்த தகவல் அனைவரையும் வியக்க வைத்தது.
அதன்பிறகு அமெரிக்கா மீண்டும் ஒரு விண்கலத்தை அனுப்பி, சந்திரயான் 1 கூறியது சரிதான் என்பதை உறுதி செய்தது.
மீண்டும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும் என சர்வதேச நாடுகள் முயற்சி செய்யும் அளவுக்கு சந்திரயான் 1 விண்கலம் அமைந்தது. சந்திரயான்2 நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்குகிறது. இப்பகுதியில் விண்கலத்தை இறக்கும் முதல் நாடாகவும் இந்தியா அமைந்துள்ளது. இனிமேல் மற்ற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் தென்துருவப் பகுதிக்கு செல்ல வேண்டுமென முயற்சி எடுக்கத்தொடங்கி உள்ளனர். சந்திரயான் 2 அனுப்பிய புகைப்படங்களை பார்த்ததோடு மட்டுமில்லாமல், அது எத்தகைய தகவலை தெரிவிக்க உள்ளது என்பதை சர்வதேச நாடுகளே எதிர்நோக்கி உள்ளன. அந்த அளவுக்கு இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ள செப்.7-ம் தேதி முக்கிய நாளாக அமைந்துள்ளது.
அடுத்தகட்டமாக சந்திரயான் 3, சூரியனை ஆராய்ச்சி செய்வதற் காக ஆதித்யா, நிலவையும், செவ்வாயையும் ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா 1 போன்ற விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன.
தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது. அதை யும் தாண்டி அறிவியல் ஆய்வரங்கம் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே அறிவியல் படைப்புகளை உருவாக்கும் திறன் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சராசரியாக 25 சதவீதம்பேர்தான் உயர்கல்வி வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இருந்து உயர்கல்விக்கு செல் வோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. அதாவது உயர் கல்வி பயில்வதில் தமிழகம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்றார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்