Published : 26 Aug 2019 08:07 AM
Last Updated : 26 Aug 2019 08:07 AM

இன்று உலக நாய்கள் தினம்: நாட்டுநாய் இனங்களை காக்க களமிறங்கிய இளைஞர் குழு

எல்.மோகன்

நாகர்கோவில்

நாட்டு மாடுகளைப் போன்று தமிழர் களின் வாழ்க்கை முறை, பாரம்பரி யத்தோடு ஒன்றியவை நாட்டு நாய் கள். ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் மன்னர்கள் காலத்தில் இருந்தே மனித வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்துள்ளன.

தற்போது வெளிநாட்டு நாய் களின் பெருக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஜெர்மன் ஷெப் பர்டு, டாபர்மேன், லேப், டால் மேஷன், பக், ராட்வீலர் போன்ற வெளிநாட்டு ரக நாய்களை காவ லுக்காகவும், வர்த்தக ரீதியிலும் வளர்க்கும் ஆர்வம் அதிகரித் துள்ளது. நாட்டு நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் குறைந்து வருவதால், அந்த இனங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டு நாய் இனங்களை அழிவில் இருந்து காத்து, மீட்கும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு ஈடுபட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள ‘ப்ரவுட் ஓனர்ஸ் ஆஃப் ராயல் தமிழ் ஹௌண்ட்ஸ்’ (Proud owners of royal tamil hounds) எனும் இக்குழு சமூக வலைதளங்களில் நாட்டு நாய் ஆர்வலர்களை தொடர்ந்து ஒருங் கிணைத்து வருகிறது.

இக்குழுவின் அட்மின் கன்னி யாகுமரியைச் சேர்ந்த எம்.நாக ராஜன் கூறியதாவது: வீரமும், விசுவாச குணமும் அதிகம் கொண் டவை நாட்டு நாய்கள். இவை அழியும் ஆபத்தான சூழலில் இருப் பதால், ஜல்லிக்கட்டு காளைகளை மீட்டெடுத்ததுபோல் நாட்டு நாய்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கல்லூரி ஆசிரியர் பணியை துறந்து, இளைஞர்கள் அடங்கிய குழுவைத் தொடங்கி பாரம்பரிய நாட்டு நாய்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கோம்பை இன நாட்டுநாய்கள் சிங்கம், புலியைகூட எதிர்க்கும் குணாதிசயம் கொண்டவை மட்டு மின்றி உடல் பலம் மிக்கவை. இதற்காகவே இவற்றை பொள் ளாச்சி, சத்தியமங்கலம், உத்தரா கண்ட் போன்ற மலையோர பகுதி மக்கள் வளர்த்து வருகின்றனர்.

வெள்ளை குதிரை போல் கம்பீர மும், வளர்ப்பவரிடம் விசுவாசமும் கொண்டவை ராஜபாளையம் நாய் கள். கிராமப்புறங்களில் பெண் வீட் டார் சீதனமாக கொடுக்கும் கன்னி நாய் வகைகளை மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதியினர் ஆர்வ முடன் வளர்க்கத் தொடங்கியுள்ள னர்.

சிறந்த தோட்ட காவலாளியான வேட்டை குணாதிசயம் கொண்ட சிப்பிப்பாறை இனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரளவு காணப் படுகிறது. சென்னையில் இருந்த பாரம்பரிய நாட்டு நாய்கள் அபி விருத்தி மையம் மூடப்பட்டதால், எங்கள் குழுவைச் சேர்ந்த இளை ஞர்கள் அந்தந்த பகுதிகளில் பண்ணை அமைத்து நாட்டு நாய் இனங்களை மீட்டு வருகிறோம். இதற்கு அரசு உதவ வேண்டும் என்றார்.

நோய்கள் தாக்காது

கன்னியாகுமரி அரசு கால்நடை மருத்துவர் அனிஷ் கூறும்போது, “ நமது நாட்டு தட்பவெப்பத்துக்கு ஏற்றவை நாட்டுநாய்கள். உடலில் முடி குறைவாக உள்ளதால் நோய் கள் பாதிக்காது. வெளிநாட்டு நாய் களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு. நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். நாட்டுநாய்களுக்கு பிரத்யேக கவனம் செலுத்த வேண் டியதில்லை. சாதாரண உணவே போதும். நாட்டுநாய்கள் வளர்ப்பு குறித்து படித்த இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப் பதால், அவை அழிவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x