மத்திய அரசுக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்போம்: மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் தகவல்

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
Updated on
1 min read

கடலூர்

மத்திய அரசுக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருங் கிணைக்கும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு மற்றும் கலை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:

பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரம் தற் போது சரிவை நோக்கிச் செல்கி றது. ஆட்டோமொபைல் துறையில் லட்சக்கணக்கானோர் வேலை யிழந்து வருகின்றனர். 45 ஆண்டு களில் இல்லாத வகையில் வேலை யில்லா திண்டாட்டம் நிலவுவதாக அரசின் புள்ளி விவரங்களே தெரி விக்கின்றன. தற்போது அனைத்து தொழிலாளர்களும் மத்திய அர சுக்கு எதிராக போராடி வருகின் றனர். இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும் எனத் தெரிவித் தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் பேசினர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in