மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா

ராசிபுரம் அருகே பட்டணம் குச்சிக்காடு கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, 'கலைஞர் பகுத்தறிவாலயம்' என்ற பெயரில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.
ராசிபுரம் அருகே பட்டணம் குச்சிக்காடு கிராமத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, 'கலைஞர் பகுத்தறிவாலயம்' என்ற பெயரில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.
Updated on
1 min read

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிக்காடு கிராமத்தில் அருந்ததியர் முன்னேற்றப் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திமுகவைச் சேர்ந்த பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்.நல்லதம்பி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து குச்சிக்காடு அருந்த தியர் முன்னேற்றப் பேரவைத் தலை வர் கே.சின்னுசாமி கூறியதாவது:

குச்சிக்காடு கிராமத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மறைந்த திமுக தலைவர் கருணா நிதிக்கு, ‘கலைஞர் பகுத்தறிவாலயம்' என்ற பெயரில் கோயில் கட் டப்பட உள்ளது. ரூ.30 லட்சம் மதிப் பில் இந்த கோயில் கட்டப்பட உள் ளது. இதற்கான நிதி அருந்ததியர் சமூக பிரிவு மக்களிடம் திரட்டி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கோயி லில் கருணாநிதியின் வரலாறு, நூலகம் உள்ளிட்டவை இடம் பெறும். ‘மனிதக் கழிவுகளை மனி தனே அள்ளக் கூடாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு’ என்பன போன்ற முக்கிய அறிவிப்புகளை கருணாநிதி வெளி யிட்டு நடைமுறைப்படுத்தினார்.

இதன்காரணமாகவும், அவர் மீதுள்ள பற்று காரணமாகவும் கோயில் கட்டப்படுகிறது. தேவை தான் கடவுளை உருவாக்குகிறது. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியை கடவுள் உருவில் காண்கிறோம் என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in