

சென்னை
நிதி நெருக்கடியை சமாளிப்பதற் காக, மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2012-ம் ஆண் டில் மின்கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 2014-ம் ஆண்டு 15 சதவீதம் உயர்த் தப்பட்டது. இந்நிலையில், மின் வாரியத்துக்கு கடும் நிதி நெருக் கடி ஏற்பட்டுள்ளது. இதை சமா ளிக்க, மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்துக்குள் மின்வாரியம் தன் மொத்த வருவாய் தேவை அறிக் கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளிக்கும். அந்த அறிக்கையை ஆணையம் ஆய்வு செய்து வருவாயைவிட செலவு அதிகம் இருந்தால், பற் றாக்குறையை ஈடுகட்ட மின்கட்ட ணத்தை உயர்த்த முடிவு செய்யும். அந்த வகையில், தற்போது பற்றாக்குறை அதிகமாக இருப்ப தால் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் ஆலோசித்து வரு கிறது. இதுதொடர்பாக மின் வாரிய ஒழுங்குமுறை ஆணை யத்திடம் மின்வாரியம் அனுமதி கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்