Published : 26 Aug 2019 07:58 AM
Last Updated : 26 Aug 2019 07:58 AM

மதுவிலக்கை அமல்படுத்த கோரி செப். 15-ம் தேதி உண்ணாவிரதம்: காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் அறிவிப்பு

காஞ்சிபுரம்

தமிழகத்தில் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி, காந்தி பேரவை சார்பில் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த அனைத்துக் கட்சியினரையும் அழைத்து உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்படும் என்று காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் கோரிக்கை விடுத்து வருகிறார். அவர், மது விலக்கை அமல்படுத்திய முன் னாள் முதல்வர்களின் ஊர்களுக் கும், இல்லங்களுக்கும் சென்று வருகிறார்.

அதன்படி காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்துக்கு நேற்று வந்தார். அங்கு அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப் போது, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் குமரி அனந்தன் கூறியதாவது:

அண்ணா தன் ஆட்சியின்போது மதுவை முற்றிலும் ஒழித்தார். அவர் பெயரை கட்சியில் வைத் துக்கொண்டு ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் பழனிசாமியும் மதுவை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் தமிழக அரசின் மது ஒழிப்பு தொடர்பான கொள்கை முடிவை சுதந்திர தினத்தன்று அறிவித்து, அண்ணா பிறந்த நாளில் இருந்து மது இல்லா தமிழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர்கள் செய்யவில்லை.

எனவே, அண்ணா பிறந்த செப்டம்பர் 15-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில், காந்தி பேரவை சார்பில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இந்த உண்ணாவிரதப் போராட் டத்துக்கு திமுக தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட மது வேண் டாம் என்று கூறும் அனைவரையும் அழைப்போம். அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவ தாக கூறுபவர்கள் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x