Published : 26 Aug 2019 07:53 AM
Last Updated : 26 Aug 2019 07:53 AM

உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மதுரையில் நடந்த ‘ஆளப்பிறந்தோம்’ நிகழ்ச்சியில் அமைச்சர் அறிவுரை

மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

உலகளாவிய போட்டிகளை எதிர் கொள்ள மாணவர்கள் திறமை களை வளர்த்துக் கொள்ள வேண் டும் என வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத் தினார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ‘ஆளப்பிறந்தோம்’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நேற்று நடத்தின. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:

`இந்து தமிழ்' நாளிதழ் தொடங் கியதில் இருந்து 6 ஆண்டுகளில் தொடாத துறைகளே இல்லை. மாணவர்கள், குழந்தைகள், விவ சாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் மேம்பட வேண்டும், அறியாமை என்ற இருளில் இருந்து மீட்டெ டுக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தங்களை அர்ப் பணித்து நல்ல பணியை செய்து வருகின்றனர்.

இந்து குழுமம் எப்போதும் சொல்கிற செய்தியை அழுத்தமாக வும், இதயத்தில் இடம் பிடிக்கும் வகையிலும் சொல்லும். யார் ஒருவர் தங்களை முன்னிறுத்தாமல் பணியை முன்னிறுத்துகிறார்களோ அங்கே வெற்றியைப் பார்க்க முடியும். அதை இந்து குழுமத் தினர் பின்பற்றுகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் ஆட்சியர் பதவி உயர் பதவியாகக் கருதப்படுகிறது. அரசு துறைகளில் வருவாய் உட்பட 55 துறைகளுக்கும் தலைவராக இருப்பவர் மாவட்ட ஆட்சியர்.

அனைத்து வேலைகளுக்கும் போட்டித் தேர்வுகள் மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்ற னர். எல்லோரும் சாதனை புரிய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அதற்கான வழி தெரியா மல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு ஒரு தெளிவான வழியைக் காட்டும் நோக்கத்தில் ‘ஆளப்பிறந்தோம்' போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சாதனைக்கு முதல் தகுதி கவனித்தல் ஆகும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது மனது அலைபாய் வது வழக்கமானது. கவனிக்க ஆரம்பித்து விட்டால் வெற்றியை எளிதாகப் பெற முடியும். கற்றலும், கேட்டலும் எங்கே இருக்கிறதோ அங்கே தலைமைப் பண்பு வரும்.

இப்போது உலகளாவிய போட்டி களை எதிர்கொள்ள வேண்டியுள் ளது. இதற்காக மாணவ, மாணவி கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் கற்றல், கவனித்தல், தலைமைப் பண்பு ஆகிய மூன்று திறமைகளை யும் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது படிப்பு குறைந்து, பார்ப்பது அதிகரித்துள்ளது. படிப் பதை ஆழமாக, தெளிவாகப் படிக்க வேண்டும். நம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் எந்தக் காரியத்தை செய்தாலும், அதை முழுமையான அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் செய்தால் அது நிச்சயம் வெற்றி பெறும். தீயவையில் இருந்து விடுவித்து, நல்லவற்றை பின்பற்ற வேண்டும். பெற்றோரை வணங்குங்கள், அதிகம் படியுங்கள். சாதனைபுரிய வாழ்த்துகள்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x