

கோவை
தேடப்படும் தீவிரவாதிகளுடன் தொலைபேசி தொடர்பில் இருந்ததாக பிடிபட்ட இருவர் நிபந்தனை யின்பேரில் விடுவிக்கப்பட்டதுடன், கோவையில் 3-வது நாளாக நேற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட் டுத் தலங்கள், ராணுவ மையங் கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளதாக, மத்திய உளவுத் துறையினர் தமிழக போலீஸாரை எச்சரித்தனர். கோவையில் லஷ்கர் -இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள், ஊடுருவி யுள்ளதாக வந்த தகவலையடுத்து, கடந்த 22-ம் தேதி இரவு முதல் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர மற்றும் மாவட்ட போலீ ஸார், சிறப்புக் காவல் படையினர், தமிழக கமாண்டோ படை வீரர்கள், அதி விரைவுப் படையினர், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் என 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டை
கோவையில் 3-வது நாளாக நேற்றும் போலீஸாரின் கண் காணிப்பு தொடர்ந்தது. மாநகரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து, வாகன தணிக்கை மூல மாக போலீஸார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர். வாராந்திர வழிபாட்டுக்காக கிறிஸ்தவர்கள் அதிகம் கூடும் ஆலயங்களுக்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீஸாரால் தேடப்படும் 6 தீவிரவாதிகளுடன், தொலை பேசியில் தொடர்பு வைத்திருந்த தாக திருச்சூரைச் சேர்ந்த சித்திக், கோவை உக்கடம் பொன்விழா நகரைச் சேர்ந்த ஜாகிர் ஆகிய இருவரை பிடித்து, கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் சென்னை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர், புறநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
நள்ளிரவில் இருவரும் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு, காவல் உயர் அதிகாரிகளால் விசாரிக் கப்பட்டனர். பின்னர், ‘சம்மன் அனுப்பும்போது ஆஜராக வேண் டும்' என்ற நிபந்தனையின்பேரில் இருவரையும் விடுவித்தனர்.
சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், துணைக் காவல் ஆணையர்கள் பி.பெருமாள், எல்.பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தலை மையில், மாநகர, மாவட்ட எல்லைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்