

சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
ஒடிஷா கடலோரப் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது வடக்கு சத்தீஸ்கர் மற்றும் கிழக்கு மத்திய பிரதேச மாநிலம் அருகே நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 3 செமீ, வால்பாறை, காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை பதிவான மழை அளவுகளின்படி, 208 மிமீ மழை செய்துள்ளது. இது வழக்கத்தை விட 3 சதவீதம் அதிகமாகும். தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட முறையே 79 சதவீதம், 75 சதவீதம் மழை அதிக மாக பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்