Published : 26 Aug 2019 07:24 AM
Last Updated : 26 Aug 2019 07:24 AM

கோயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு 

சென்னை 

கோயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தாக்குதல் நடத் தும் திட்டத்தோடு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் கோவையில் ஊடுருவியுள்ளதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட் டுத் தலங்கள் உள்ளிட்ட இடங் களில் தாக்குதல் நடத்த திட்டமிட் டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறை தமிழக போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழி பாட்டுத் தலங்கள் உட்பட தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதுவரை பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவ தும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின்கீழ் 40,000-க்கும் மேற்பட்ட கோயில் கள் உள்ளன. இக்கோயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண் டும் என்று அனைத்து மண்டல இணை ஆணையர்கள், செயல் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட் டுள்ளார்.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: காவல் துறை யினர் உதவியுடன் கோயில்களில் பாதுகாப்புப் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண் டும். மண்டல இணை ஆணையர் கள் தங்கள் கட்டுபாட்டின்கீழ் உள்ள கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவற்றை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு குறுந்தக வல் மூலம் ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x