பாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் விவகாரம்; அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு- வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு: ஊழியர்கள் இன்றுமுதல் பணிக்குத் திரும்புகின்றனர்

பாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் விவகாரம்; அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு- வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு: ஊழியர்கள் இன்றுமுதல் பணிக்குத் திரும்புகின்றனர்
Updated on
1 min read

சென்னை

பாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் விவ காரம் குறித்து, மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, பாதுகாப்புத் தொழிற் சாலைகள் ஊழியர்கள் மேற் கொண்ட ஒருமாத கால வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். இதையடுத்து, ஊழியர்கள் இன்று முதல் பணிக் குத் திரும்புகின்றனர்.

நாட்டின் பாதுகாப்புக்கு தேவை யான பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட 650-க் கும் மேற்பட்ட தளவாடப் பொருட் களை, நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 82,000 ஊழியர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் தீவிர தனியார்மயக் கொள்கையின் காரணமாக, 275 ராணுவ தளவாட உதிரிபாகங்களை இனிமேல் பாதுகாப்புத் துறை தொழிற்சாலை களில் உற்பத்தி செய்யாமல், தனியாரிடம் உற்பத்தி செய்ய முடிவெடுத்து அமுல்படுத்தி வரு கிறது.

அத்துடன், 41 பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றவும் அரசு தீர்மானித்துள்ளது.

தனியார்மயமாக்கும் நடவடிக்கை

இதன்மூலம், இத்தொழிற் சாலைகளை தனியார் மயமாக்கு வதற்கான நடவடிக்கைகளை மத் திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதைக் கண்டித்து கடந்த 20-ம் தேதி முதல் வரும் செப்.19-ம் தேதி வரை ஒருமாதத்துக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

அகில இந்திய பாதுகாப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் சம் மேளனம், இந்திய தேசிய பாது காப்பு ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் பாரதிய பிரதிரக்ஷா மஸ் தூர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர் கள் பங்கேற்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில், தமிழகத்தில் 15,000 ஊழி யர்கள் பங்கேற்றனர். நாளொன் றுக்கு ரூ.5 கோடிக்கும் மேல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, டெல்லி யில் பாதுகாப்பு தளவாட உற்பத் தித் துறை செயலாளர் தலைமை யில் கடந்த சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில், பாதுகாப்பு துறைச் செயலாளர், பாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷ னாக மாற்றுவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என உறுதி அளிக்கப்பட்டது.

உயர்மட்ட குழு அமைப்பு

அத்துடன், இப்பிரச்சினைக் குறித்து விவாதிப்பதற்காக உயர் மட்ட குழு அமைக்கப்படும் என அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து கடந்த 20-ம் தேதி முதல் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளன.

இதையடுத்து, பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (26-ம் தேதி) முதல் பணிக்குத் திரும்புகின்றனர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in