வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை உயர்வு 

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை உயர்வு 
Updated on
1 min read

சென்னை

வெளி மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து குறைந்திருப் பதால், கோயம்பேடு சந்தையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ ரூ.30-க்கு விற்கப் பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 21 மில்லியன் டன் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட் டிலேயே ஆண்டுக்கு 6.5 மில்லி யன் டன் உற்பத்தியுடன் மஹா ராஷ்டிர மாநிலம் முதல் இடத் திலும், 2.8 மில்லியன் டன் உற்பத்தியுடன் மத்திய பிரதேசம் 2-ம் இடத்திலும், கர்நாடக மாநிலம் 2.7 மில்லியன் டன் உற்பத்தி யுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு 56 ஆயி ரம் டன்தான் உற்பத்தி செய்யப் படுகிறது. இதனால் கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை மஹா ராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களை நம்பியி ருக்க வேண்டியுள்ளது. இம்மாநி லங்களில் இருந்து வெங்காய வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்ட வெங்காயம், தற்போது ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனை யில் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.60, அவரைக்காய், பீட்ரூட் தலா ரூ.20, தக்காளி, பாகற்காய், பச்சை மிளகாய் ஆகியவை தலா ரூ.25, சாம்பார் வெங்காயம் ரூ.50, கத்தரிக்காய், வெண்டைக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.18, முள்ளங்கி ரூ.10, முட்டைக்கோஸ் ரூ.12, கேரட் ரூ.35, புடலங்காய் ரூ.15, முருங்கைக்காய் ரூ.40 என கோயம்பேடு சந்தையில் விற் கப்பட்டு வருகின்றன.

வெங்காய விலை உயர்ந்து வருவது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியது: கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் அதிக அளவில் வரும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் அம்மாநிலங்களில் ஏற்பட்ட வெள் ளம் காரணமாக, வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், இருப்பில் வைத் திருந்த வெங்காயங்களும் அழுகி வருகின்றன. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிக மானதுதான். ஓரிரு மாதங்களில் விலை குறைந்துவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in