Published : 26 Aug 2019 07:07 AM
Last Updated : 26 Aug 2019 07:07 AM

கோத்தகிரியில் குதிரை பந்தய மைதானம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கடை கம்பட்டி கிராமத்தில் குதிரைப் பந்தய மைதானத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரி வித்து வருவாய்த் துறையினரை மக்கள் முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்துக்கு குதிரைப் பந்தய மைதானத்துக்கு இடம் தேர்வு செய்ய குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் தலைமையிலான வருவாய்த் துறை யினர் நேற்று வந்தனர். இதை அறிந்து அப்பகுதியில் நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டு, கோயில்கள், பள்ளி, விளை யாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் அமைக்கக் கூடாது எனக் கூறி வருவாய்த் துறையினருக்கு எதி ராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குதிரைப் பந்தய மைதானம் அமைப்பது சாத்திய மற்றது என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தெரிவித்ததால், அனைவரும் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட நீரா தாரங்கள் பாதுகாப்பு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.ராஜூ கூறும்போது ‘‘உதகையில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்துக்கு மாற்றாக, மாவட்ட நிர்வாகம் 52 ஏக்கர் நிலத்தை கோத்தகிரி பகுதியில் அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குதிரைப் பந்தய மைதானம் அமைப் பதாக கூறப்படும் பகுதியில் கணிச மான பகுதி வருவாய்த் துறை காடு களையும், நீராதாரங்களையும் கொண்டுள்ளது. அனைத்து நீரா தாரங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x