

சென்னை
பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை சென்னையில் இன்று (ஆக.26) காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக புதிதாக கல்வி தொலைக்காட்சி சேனலைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டது. இப்பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (ஆக.26) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில், முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு தமிழக அரசின் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பைத் தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
கல்வி தொலைக்காட்சி தொடக்க விழாவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
கல்வி தொலைக்காட்சி சேனலில் 24 மணி நேரமும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். கல்வி உதவித் தொகை பெறு வதற்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத் தேர்வு குறித்த விவரங் கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், மாணவர்களின் அரிய கண்டு பிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் என்று கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்