வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: பிளஸ் 2 கல்வித் தகுதியை படித்த பள்ளியிலேயே பதிவுசெய்யலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: பிளஸ் 2 கல்வித் தகுதியை படித்த பள்ளியிலேயே பதிவுசெய்யலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு பிளஸ் 2 கல்வித் தகுதியை மாணவர் கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளி களிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சார்ந்த பணி மேற்கொள்ளப்படும்.

எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியை பதிவுசெய்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை எண், ஆதார் அட்டை எண் (இருந்தால் மட்டும்), குடும்ப அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று வர வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளி லேயே நடைபெறும் பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக் கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளே பதிவு மூப்பு தேதியாக வழங்கப் படும்.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணைய தளம் (www.tnvelaivaaippu.gov.in) வழியாகவும் பதிவுசெய்துகொள் ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in