Published : 25 Aug 2019 10:08 AM
Last Updated : 25 Aug 2019 10:08 AM

தமிழக நீராதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதல்வர் பழனிசாமியின் காலம் பொற்காலம் : மன்னார்குடியில் ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

திருவாரூர்

தமிழக நீராதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதல்வர் பழனிசாமியின் காலம் பொற்காலம் என எதிர்காலத்தில் பாராட்டப் படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித் தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே கட்டக்குடி, மகாதே வப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், குடிமராமத்து பணிகள் மற்றும் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை அமைச்சர் காமராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுடன், மன்னார்குடி பாமணி ஆறு, நாகராஜன் கோட்டகம் பாலம் கட்டும் பணியைப் பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டம், குடிமராமத்துப் பணி களுக்கு தலா ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்திலுள்ள நீராதார கட்ட மைப்புகளை மேம்படுத்தி, மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்பு களாக மாற்றுவதற்கு, ஆட்சியர், கணிப்பாய்வு அலுவலர் மற்றும் நிர்வாக ஆணையர் போன்ற வர்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்தி, நீர் கட்டமைப்பை மேம்ம்படுத்த ஆற்றி வரும் பணியின் அடிப்படையில், முதல்வர் பழனிசாமியின் காலம் ஒரு பொற்காலம் என எதிர்காலத்தில் பாராட்டக்கூடிய அளவில், தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது. இந்தப் பணி தமிழகத்தில் நீராதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு மைல்கல்லாக அமையும் என்றார்.

இதையடுத்து, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர் வாரும் பணிகளை ஆக.31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், பொக்லைன் இயந்திரங்களை தேவையான இடங்களுக்கு வெளி மாவட்டத்திலிருந்தும் வரவழைத்து, காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வேலைகளை நடத்தி தூர் வாரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். இதேபோல, குடிமராமத்து பணிகளை செப்.15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத் தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டமானது, விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில், கடந்தாண்டு, மாநிலத்தில் முதல் பரிசைப் பெற்றதைப்போல, நிகழாண்டிலும் சிறப்பான பணிகளை மேற்கொள்ள ஆட்சியருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

ஆய்வின்போது, திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x