Published : 25 Aug 2019 09:56 AM
Last Updated : 25 Aug 2019 09:56 AM

வாகன உற்பத்தி துறையில் நிலவும் அசாதாரண சூழல் தற்காலிகமானது: அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி

சென்னை

வாகன உற்பத்தி துறையில் நிலவும் அசாதாரண சூழல் தற்காலிக மானது. அதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

செட்டியார் வர்த்தக சபை தொடக்க விழா மற்றும் வர்த்தக கண்காட்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று கண் காட்சியை திறந்துவைத்து பார்வை யிட்டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:

பல நூற்றாண்டுகளுக்கு மேலாக கடல் கடந்து சென்று வாணி பம் பெய்து வந்தவர்கள் செட்டி யார்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் செட்டியார் சங் கங்கள் இணைந்து, செட்டியார் வர்த்தக சபையை உருவாக்கியுள் ளனர். அந்த சமூகத்தை சேர்ந்தவர் கள் தொழில் தொடங்கவும், நுட்பங்களை கடைபிடிக்கவும், எத்தகைய தொழில் தொடங்கி னால் லாபகரமாக இருக்கும் என் பன உள்ளிட்ட பல்வேறு ஆலோ சனைகளை வழங்கும் விதமாகவும் இந்த செட்டியார் வர்த்தக சபை உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என தொழில்துறை சார்பில் வாழ்த்துகிறேன்.

வாகன உற்பத்தி துறை தொடர் பாக மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக் கப்பட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் வாகனங்களுக்கான வரி களை குறைப்பது தொடர்பாகவும், வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தொழில் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான வட்டி விகிதம் ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வாகன உற்பத்தி துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதி லும், அத்துறையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை எதிர்கொண்டு தீர்வு காண்பதிலும் முதல்வர் பழனிசாமி உறுதியாக உள் ளார். இந்த நிலை தற்காலிக மானதுதான். அதை சரி செய்வதற் கான வழிகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசு சார்பில் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற முதல்வர் தொடர்ந்து வலியுறுத்துவார்.

சொகுசு பயணத்தை விரும்பும் மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை உதவியாக உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. வரை ரூ.10 கட்டணத்தில் பயணிக்கும் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. வாகன விற்பனை குறைவுக்கு இதுவும் ஒரு காரணம்.

மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் 45 கி.மீ. நீள பணிகள் முடிந்துள்ளன. 2-ம் கட்ட திட்டத் தில் 9.3 கி.மீ. நீள பணிகள் முடி வடையும் தருவாயில் உள்ளன. இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்து 52 கி.மீ. நீள திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் நிறை வடையும்போது, எந்நேரமும் மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட் டம் இருக்கும். அதனால் கூட்டம் இல்லாத நேரங்களில், பயணிகளை அதிகரிப்பதற்காக சலுகை கட்டண பயணத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.

நிகழ்ச்சியில் செட்டியார் வர்த் தக சபை பொறுப்பாளர்கள் பிஎல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, எஸ்.எம் பாலாஜி, எஸ்.எம்.சங்கர் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x