Published : 25 Aug 2019 08:11 AM
Last Updated : 25 Aug 2019 08:11 AM

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை: 2-வது நாளாக போலீஸார் தீவிர கண்காணிப்பு; கோவையில் பிடிபட்ட 2 இளைஞர்களிடம் விசாரணை

சென்னை / கோவை

தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 2-வது நாளாக நேற்று போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் பிடிபட்ட 2 இளைஞர்களிடம் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நெற்றியில் விபூதி பூசி, திலகமிட்டு மாறுவேடத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர், கோவையில் ஊடுருவியுள்ளதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட் டுத் தலங்கள், ராணுவ மையங் கள் உள்ளிட்ட இடங்களில் தாக்கு தல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ள தாகவும் மத்திய உளவுத் துறை யினர் தமிழக போலீஸாருக்கு எச்ச ரித்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தர வின்பேரில் கடந்த 22-ம் தேதி இரவு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வணிக வளாகங் கள், பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் துள்ளனர்.

குறிப்பாக, தீவிரவாதிகள் பதுங் கியுள்ளதாகக் கூறப்படும் கோவை யில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாநகர மற்றும் மாவட்ட போலீஸார், சிறப்புக் காவல் படையினர், தமிழக கமாண்டோ படை வீரர்கள், அதிவிரை வுப் படையினர், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் என மாநகர் மற்றும் மாவட்ட பகுதி முழுவதும் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் 50 இடங்களி லும், மாவட்டத்தில் 50-க்கும் மேற் பட்ட இடங்களிலும் போலீஸார், தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து நேற்றும் வாகன சோதனை, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் அச்சத்தை போக்குவதற்காக மேட் டுப்பாளையத்தில் தொடங்கி கார மடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதிகளில் ஆங்காங்கே கமாண்டோ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

2 பேர் சிக்கினர்

இதற்கிடையில், போலீஸாரால் தேடப்படும் 6 தீவிரவாதிகளுடன், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் பேசிவரு வதாக தகவல் கிடைத்தது. இதை யடுத்து, அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், அவருடன் தொலைபேசியில் தொடர்புவைத்து இருந்ததாக திருச்சூரை சேர்ந்த சித்திக், கோவை உக்கடம் பொன் விழா நகரை சேர்ந்த ஜாகிர் ஆகிய 2 இளைஞர்களை கோவை மாநகர போலீஸார் மற்றும் சென்னை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நேற்று பிடித்தனர். 2 பேரையும் காருண்யா நகர் காவல் நிலையத் தில் வைத்து விசாரிக்கின்றனர்.

திருச்சூரை சேர்ந்த சித்திக், சென் னையில் பணியாற்றி வருகிறார். இவர், காவல்துறையால் தேடப் படும் நபருடன் செல்போன் தொடர் பில் இருந்துள்ளார். இவரை சென்னை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் 2 நாட்களாக கண் காணித்து வந்துள்ளனர். இவர், நேற்று சொந்த ஊருக்கு செல்வ தற்காக சென்னையில் இருந்து கோவை காந்திபுரத்துக்கு வந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த சென்னை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், கோவை மாநகர போலீஸாருடன் இணைந்து பிடித் துள்ளனர். ஜாகிர், செல்போன் மூலம் சித்திக்கிடம் அடிக்கடி பேசி வந்ததால், அவரையும் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இருவர் பிடிபட்ட விவகாரம் தொடர் பான கூடுதல் விவரங்களை தெரி விக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

சென்னையில்..

சென்னையில் காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை யில், கூடுதல் காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா மேற்பார்வையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ ஸார் நகர் முழுவதும் தீவிர வாக னச் சோதனை, கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நேற்றும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டது. ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு மேற்கொள் ளப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா என கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மாநிலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். முக் கிய கோயில்கள், பேராலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலை யங்கள், கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அடுத்த மாதம் 2-ம் தேதி விநாய கர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால், அதுவரை கண்காணிப் புப் பணியை முழுவீச்சில் செயல் படுத்த போலீஸார் முடிவு செய் துள்ளனர்.

இஸ்லாமிய கூட்டமைப்பு

இதற்கிடையே தீவிரவாதிகள் ஊடுருவல் விவகாரம் தொடர்பாக, உண்மைத் தன்மையை மக்க ளுக்கு காவல்துறை விளக்க வேண்டுமென இஸ்லாமிய இயக் கங்களின் கூட்டமைப்பினர் வலி யுறுத்தியுள்ளனர். இதுதொடர் பாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரனிடம் மனு அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x