

சென்னை
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்த நாளையொட்டி சுகா தார மையங்களுக்கு 1,500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங் கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந் தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை அக்கட்சியினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விஜயகாந்தின் 68-வது பிறந்த நாள் இன்று கொண் டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி மாணவ - மாணவியருக்கு இனிப்புகளை வழங்கி, விஜயகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
விஜயகாந்தின் பிறந்தநாளில் ஒவ்வொரு ஆண்டும் புதிய நலத் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.1.50 கோடி மதிப்பில்
இந்த ஆண்டு தமிழகம் முழு வதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் மக்கள் பயன்பாட் டுக்காக 1,500 தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் வழங்கப்படுகிறது. இதை தொடங்கிவைக்கும் வித மாக தண்ணீர் சுத்திகரிப்பு இயந் திரங்களை விஜயகாந்த் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசும் போது, “ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் முக்கியமானது. அதை நாம் சேமிக்க வேண்டும். அந்த வகையில், பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மொத்தம் 1500 சுத்திகரிப்பு இயந் திரங்கள் வழங்கப்படுகின்றன.
தேமுதிக சார்பில் எல்லா இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். தேமுதிக சார்பில் அடுத்த மாதம் 15-ஆம் தேதி திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. அதில் விஜயகாந்த் கலந்து கொள்வார்’’ என்றார்.