Published : 25 Aug 2019 07:58 AM
Last Updated : 25 Aug 2019 07:58 AM

பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசின் ‘கல்வி தொலைக்காட்சி’ நாளைமுதல் ஒளிபரப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சென்னை

தமிழக அரசின் 'கல்வி தொலைக் காட்சி' சேனல் நாளை முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண உரிய ஏற்பாடுகளை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிதாக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு சேனலின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்த பணிகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நாளை (ஆகஸ்ட் 26) முதல் தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி தொலைக்காட்சி ஒளி பரப்பை தொடங்கி வைக்கவுள் ளார். விழாவில் பேரவை தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான விழா அழைப்பிதழை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை அதிகாரிகள் முதல்வர் பழனி சாமியை நேற்று நேரில் சந்தித்து வழங்கினர். இந்தச் சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். மாணவர்களுக்கு பயன்படும் வகை யில் கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத் தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டு பிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

இந்நிலையில், கல்வி தொலைக் காட்சியின் தொடக்க விழாவை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக் குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியை மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிட ஏதுவாக கல்வி சேனலில் மாலை 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே, தொடக்க விழாவை காண்பதற்கான உரிய ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் மேற் கொள்ள வேண்டும்.

அதன்படி, கேபிள் இணைப் புள்ள பள்ளிகள் ப்ரொஜெக்டர் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப லாம். கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள் யுடியூப் மூலம் ப்ரொ ஜெக்டரில் நேரலை செய்ய வேண் டும். மேலும், கல்வி சேனல் நிகழ்ச்சி களை மாணவர்கள் காண்பது போல் புகைப்படங்கள், வீடியோக் கள் எடுத்து அதை எமிஸ் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான அறி வுறுத்தல்களை பள்ளி தலைமையா சிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x