

சென்னை
கொள்ளை சம்பவங்களைத் தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் வசூலாகும் பணத்தை பணியாளர்கள் வங்கி களுக்குச் சென்று செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பணம் செலுத்தச் செல்லும் பணியாளர்களைத் தாக்கி பணத்தை கொள்ளையடிப்பது மற்றும் டாஸ்மாக் கடைகளில் புகுந்து கொள்ளையடிப்பது என சில சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த பேட்டப்பனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாளரைக் கொலை செய்து, ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பணியாளர் பாதுகாப்புக்காக...
இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் பணியாளர்களின் பாதுகாப்புக்கு தேவையான கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய் துள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக் பணி யாளர்கள் தினமும் வசூலாகும் பணத்தை செலுத்தும் வகையில் 200 கிலோ எடை கொண்ட நவீன பணம் செலுத்தும் இயந்திரத்தை டாஸ்மாக் கடைகளில் பொருத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டாஸ்மாக் பணியாளர்கள் வசூல் செய்யும் பணத்தை நவீன பணம் செலுத்தும் இயந்திரங்களில் செலுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் இயந்திரத்தை பொருத்த முடிவு செய்துள்ளோம். இந்த இயந்திரத்தில் பணத்தை செலுத்த மட்டுமே முடியும். கொள்ளையர்கள், இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுத்துச் செல்ல முடியாத வகையில் இது வடிவமைக்கப்படும். இதனால், ஊழியர்களுக்கும் பணியின் போது பாதுகாப்பு ஏற்படும்.
சில தினங்களில் சோதனை அடிப்படையில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு பயன்படுத்தப் படும். இதில் திருப்தி ஏற்பட்ட பின்னர் முதற்கட்டமாக எத்தனை கடைகளில் பொருத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.