

சென்னை
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் ஜெ.குருவின் நினைவு மண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், செப்டம்பர் 17-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வன்னியர் சங்கத் தலைவரும், பாமகவின் மூத்த நிர் வாகியாகவும் இருந்தவர் ஜெ.குரு. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மணிமண்டபம் 8 மாதங்களில் சிறப்பாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
ஜெ.குருவின் மணிமண்ட பத்தின் திறப்பு விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.